சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி

Filed under: அரசியல்,இந்தியா |

ராகுல்காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி, சமீபத்தில், கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, அவரைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் உற்சாகமடைந்தனர். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநில பழங்குடியின கலைஞர்கள் ராகுல் காந்தியை வரவேற்று நடனமாடினர். அவர்களுடன் ராகுலும் நடனமாடினார். மேலும், தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பொனாலு பண்டிகையிலும் அவர் கலந்துகொண்டார். அப்பண்டிகையில் சாட்டாயால் தன்னை தானே அடிக்க வேண்டும் என்பதால், ராகுல்காந்தியின் சாட்டையால் தன்னை தாக்கிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.