சினிமாட்டிக் யூனிவர்ஸில் உடன்பாடில்லை!

Filed under: சினிமா |

சமீபத்தில் திரையரங்குகளில் நடிகர் அருண் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “யானை.” இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார்.

கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கிய “யானை” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 1ம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய “யானை” திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் ரிலீசுக்குப் பின் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் “யானை” படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஹரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “சினிமா என்றால் நேராக கதைதான். படம் முடிந்ததும்தான் ரசிகன் அதற்குள் இருந்து வெளியே வரவேண்டும். படம் பார்க்கும்போதே சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியுள்ளார்.