சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி !

Filed under: சினிமா |

kiruthigasimbu_2353657f‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு.

சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் ‘வணக்கம் சென்னை’. அனிருத் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி அடுத்து என்ன படம் இயக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதி படத்தை தனுஷ் தயாரிக்கவில்லை. சிம்பு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இம்மாத இறுதியில் இப்படத்தைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள். மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஜெய் நடித்துவரும் ‘புகழ்’ படத்தைத் தயாரித்து வரும் பிலிம் டிபார்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.