சிம்புவை பாராட்டிய தனுஷ்

Filed under: சினிமா |

14387791.cmsசிம்புவை போல் யாருமில்லை என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் சிம்பு, தனுஷ் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. சிம்புவுக்கும், தனுஷுக்கும் இடையில் இருப்பது வெறும் தொழில் முறை நட்பா? இல்லை நெருங்கிய நட்பா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு தனுஷ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். என்னையும், சிம்புவையும் பத்திப் பேசும்போது எதிரி என்பது போன்று சிலர் வெளிப்படையாவே பேசினாங்க, நாங்கள் யதார்த்தமா பேசினாலும் சர்ச்சை ஆக்கினாங்க. சிம்புகிட்டயும், என்கிட்டயும் நிறைய வேற்றுமை இருக்கு. நான் எதையுமே கடகடன்னு செய்றவன், சிம்பு கொஞ்சம் பொறுமையா செய்வார். ரெண்டு பேரும் கும்ப ராசி, சதய நட்சத்திரம் அது ஒரு ஒற்றுமை. இன்னொரு ஒற்றுமை என்னன்னா எங்க ரெண்டு பேரையுமே புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்.

முதல்ல நாங்க சரியா பேசிக்காத காரணத்தினால, நிறைய பேரு எங்களுக்குள்ள ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிட்டாங்க. ஆனால் அவருக்கும், எனக்கும் பர்சனலா எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் நாங்க ஒருத்தருக்கொருத்தர் பொறாமை இல்லாம இருக்க முடியுது எனவும் கூறியுள்ளார்.