சிறந்த முதலமைச்சர்களுக்கான கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா டுடே சமீபத்தில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியது. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 78% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இடம் பிடித்துள்ளார். இவருக்கு 63% பேர் ஆதரவளித்துள்ளனர். 3ம் இடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார். இவருக்கு 61 % பேர் ஆதரவளித்துள்ளனர். இந்தியாவின் சிறந்த முதல்வர்களின் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தைப் பிடித்துள்ளதற்கு அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.