சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறாரா மிஷ்கின்?

Filed under: சினிமா,தமிழகம் |

இயக்குனர் மிஷ்கின் “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனரது அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் “மண்டேலா” திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். “டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே நடித்து முடித்துள்ள “அயலான்” படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியாகி அனைவரின் கவனத்தைப் பெற்ற “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மிஷ்கின் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.