சிவகார்த்திகேயன் படம் பற்றி கமல்ஹாசன் அறிவிப்பு!

Filed under: சினிமா |

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார்.