சூப்பர்ஸ்டார் திரைப்பட அப்டேட்!

Filed under: சினிமா |

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த சில மாதங்களாக திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘ஜெயிலர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. அனேகமாக இன்று மாலை ஆறு மணிக்கு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.