சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

Filed under: சினிமா |

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து லோகேஷ் படத்துக்கு தயாராகி விடுவார் என்று சொல்லப்படுகிறது. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து இப்போது பிரபல நடிகர் ஜீவனும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இத்திரைப்படத்தின் வில்லனாக ஜீவன் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.