சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

ஏஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லால் சலாம்.”

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இத்திரைப்படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சற்றுமுன் இப்படத்தில் இடம்பெற்ற ‘தேர்த்திருவிழா’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன், ஏஆர் ரஹைனா உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் முதல் முறை கேட்கும் போதே எழுந்து ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் நடைபெறும் தேர் திருவிழாவை காட்சிப்படுத்தி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு உண்மையான தேர்த்திருவிழாவை நேரில் பார்ப்பது போல் வைத்துள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இப்பாடல் மிகப்பெரியளவில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.