சூர்யா படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

சூர்யா நடிப்பில், “வாடிவாசல்” திரைப்படத்தின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக “வாடிவாசல்” படத்தைப் பற்றிய அறிவிக்கப்பட்டும் இன்னும் பணி தொடங்கப் படவில்லை. சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்க வைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் மார்ச் மாதம் படத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.