செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா?

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 10 முறை அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதினோராவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.