உலக நாயகன் கமலஹாசனின் வசதிக்கேற்ப “இந்தியன் 2” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான “விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. இதே தேதியை சென்டிமென்டாக படக்குழு முடிவு செய்து “இந்தியன் 2” திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில் “இந்தியன் -2” படத்திற்குப் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு ஆரமித்துள்ளது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அடுத்த மாதம் இதற்காக ஷூடிங்கில் கலந்து கொள்வதால், ஐதராபாத், மும்பையில் “இந்தியன் 2” படத்திற்கு சென்றால், கமல்ஹாசனுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், படக்குழு சென்னையில் இப்படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளது. பலமுறை தொடங்கி இடையில் நின்ற இப்படத்தை உதயநிதி தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதால் முழு வீச்சில் இப்படம் தயாராகி விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.