ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழ்ச்சியை திமுக எம்.பி. கனிமொழி நடத்தி வந்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முழுவதும் விழாக்கோலம் பெறும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 13 முதல் 17 வரை திமுக எம்பி கனிமொழி தலைமையில் சென்னை தமிழ் சங்கமம் என்ற நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியபோது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நம்முடைய பாரம்பரிய கலைஞர்கள் சென்னை வந்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.