ஜான்வி கபூருக்கு நிச்சயதார்த்தமா?

Filed under: சினிமா |

ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளாவார். இவர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதலமைச்சரின் பேரனான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக பாலிவுட்டில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் காதலரோடு ஜான்வி கபூர் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அப்போது ஜான்வி கையில் வைர மோதிரம் அணிந்திருந்தார். இதைவைத்துதான் இப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.