ஜார்கண்ட் கவர்னருடன் ரஜினிகாந்த்!

Filed under: அரசியல்,உலகம்,சினிமா |

ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் வழியில் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார். தனது நண்பர்களுடன் அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன. இமயமலையிலிருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் வழியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் “ஜெயிலர்” திரைப்பட குழுவினரை சந்தித்து வெற்றி விழாவை கொண்டாட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது