ஜெயகுமார் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்

Filed under: அரசியல் |

ஜெயக்குமார் கைது கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வழக்குகளில் ஜெயகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த மூன்று வழக்குகளிலும் ஜாமின் ஜெயக்குமார் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.