ஜெய்ஸ்ரீராம் குறித்து வானதி சீனிவாசன்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிப்பதற்காக மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பில்லை” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என சில ரசிகர்கள் கோஷமிட்டது பெரும் சர்ச்சையானது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிக்க இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பு இல்லை. விளையாட்டை விளையாட்டாக பார்க்கவும், அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.