‘டான்’ டிரெய்லர் ரிலீஸ்

Filed under: சினிமா |

“டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என காட்சிகள் அதிகமாக உள்ளன. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் இருக்கிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.