டிடிஎப் வாசனோடு கிஷோர் நடிக்கும் போஸ்டர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

மோட்டார் பைக் ஒட்டி அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் நடிக்கும் “மஞ்சள் வீரன்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் வாசனின் கைது நடவடிக்கைகளால் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. “மஞ்சள் வீரன்” படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராத நிலையில், இப்போது ஐபிஎல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவரோடு நடிகர் கிஷோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை கருணாகரன் இயக்குகிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.