டில்லியில் அண்ணாமலை பேட்டி!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கூட்டணி கட்சிகள் இடையே சில சிராய்ப்புகள் வருவது அரசியலில் சகஜம்தான்” என டில்லியில் பேட்டியளித்துள்ளார்.

நேற்று டில்லி சென்ற அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிரதமர் மோடி அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகியவர்களை பல்வேறு விஷயங்களை சந்தித்தேன். கர்நாடக மாநில தேர்தல் உள்பட பல விஷயங்களை ஆலோசனை செய்தோம். கூட்டணி கட்சியை பொறுத்தவரை பாஜகவும், அதிமுகவும் அவரவர் கட்சி வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவ்வகையில் கூட்டணிக்குள் சில சிராய்ப்புகள் வருவது சகஜம் தான். பாஜகவை பொறுத்தவரை தேசிய தலைவர் நட்டாவிலிருந்து சாதாரண தொண்டன் வரை கட்சியை வளர்க்க வேண்டும் கட்சியை ஆளுங்கட்சி கொண்டு வர வேண்டும் என்று தான் எண்ணத்துடன் உள்ளன, அதை நோக்கி தான் எங்களது பயணம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எனவே கூட்டணிக்குள் ஒருசில சிராப்புகள் வந்தாலும் கூட்டணிக்குள் எந்தவித சலசலப்பும் இல்லை. தேர்தலின் போது ஒற்றுமையாக இருந்து திமுகவை வீழ்த்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.