டி இமான் வெளியிட்ட பதிவு!

Filed under: சினிமா |

கடந்த 2008ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான் மோனிகாரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

கடந்த வருடம் டி.இமான், எமிலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் முதலாவது திருமண கொண்டாடுகிறார்கள். அதன் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவிந்து வருகிறது. இமான் தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு “விசில்” திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. 2001ம் ஆண்டு “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமான இவர் மிகக்குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.