டுவிட்டரில் கருத்து மோதல்!

Filed under: அரசியல் |

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நிதியமைச்சர் பி.ஆர்.ஆர்.பழனிவேலுக்கும் கருத்து மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பி.டி.ஆர். அவரது டுவிட்டர் பக்கத்தில் பாஜக நிர்வாகியை பிளாக் செய்துள்ளார்.

அண்ணாமலை சமீபத்தில், “பெரிய பரம்பரையில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர் என்பதைத் தவிர இப்பிறவியில் ஏதேனும் நல்லது செய்தது உண்டா? தமிழக அரசியலில் பிடி.ஆர்.பழனிவேல் ஒரு சாபக்கேடு. தமிழக நிதியமைச்சரை செருப்புக்கு சமமில்லை என்று கடுமையாக சாடினார்.

இதற்கு சீமான், காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினர் உட்பட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவில் குறிப்பிட்ட நிர்வாகிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிளாக் செய்துள்ளார். தமிழக பாஜக பொதுச்செயலாளர் சூரியாவையும் பி.டி.ஆர் பிளாக் செய்துள்ளார். இதற்கு சூரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒன்னு ஜெயில்ல LOCK பண்றது இல்ல டுவிட்டர்ல BLOCK பண்றது. பரம்பரை பயந்துருச்சு” என பதிவிட்டுள்ளார்.