டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்!

Filed under: இந்தியா,உலகம் |

சந்திரயான் 3 விண்கலன் நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக “சந்திரயான்- 3”க்கு கூகுள் “டூடுல்’’ வெளியிட்டுள்ளது.

சந்திரயான்- 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத் நிலவில் தரையிறங்கியது. இதற்கு உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக “சந்திரயான்- 3’’க்கு கூகுள் “டூடுல்’’ வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.