தங்கர் பச்சான் படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Filed under: சினிமா |

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பாரதிராஜா நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார். இன்று படத்தின் முதல் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதன் பின்னர் பேசிய அவர் “தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவரான பாரதிராஜா, இந்தளவுக்கு ஒரு படத்தை புகழ்ந்து பேசி நான் பார்த்ததில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு ஓய்வு பெறும் முடிவைக் கூட எடுத்துவிடுவேன் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தை உடனடியாக பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்துள்ளது” என்று கூறினார்.