தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

Filed under: சினிமா |

இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக முதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஜேம்ஸ், “நான்சி ராணி” என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 31. அவரின் இந்த மரணம் மலையாள சினிமா உலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.