தனுஷ் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

Filed under: சினிமா |

செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “நானே வருவேன்” திரைப்படம் ரிலீசாகிறது.

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “நானே வருவேன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “வீரா சூரா” பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான தனுஷின் “திருச்சிற்றம்பலம்“ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனேகமாக செப்டம்பர் 29ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்ஸார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 2 நிமிடம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீசில் சில ஏரியாக்களை தவிர்த்து மற்ற ஏரியாக்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறதாம்.