தனுஷ் படத்திலிருந்து விலகிய ஹீரோ!

Filed under: சினிமா |

நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குநராக நிரூபித்தார். அவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அப்படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

இப்போது அவர் தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனுஷின் தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவர் விலகி அவருக்கு பதிலாக சந்தீப் கிஷன் அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.