தன் மூன்று வயது குழந்தையை கொன்ற தந்தை!

Filed under: இந்தியா |

தனது 3 வயது குழந்தையை குழந்தையின் தந்தையே கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோசந்திரகிர் லோதி. இவர் கடந்த புதன்கிழமை அன்று குடிபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் தன் 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டிக் கொன்றார். அதன்பின்னர், இறந்த தன் மகனின் உடலை ஒரு விவசாய வயதில் புதைத்துள்ளார். உடனே, அவரது மனைவி, காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இதையடுத்து போலீஸர் சந்திரகிர் லோதியைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.