தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர வைக் கூட்டம், தலைமைச் செயலகத் தில் நாளை (6-ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து அனைத்து அமைச்சர்களுக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச் சர்கள் இன்று இரவே ரங்கத்தில் இருந்து சென்னை திரும்புகின்றனர்.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை யின் முதல் கூட்டத்தை, இம்மாதம் 23-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்.

சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்குவது குறித்தும், ஆளுநர் உரையில் என்னென்ன அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிடுவது என்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.