தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை.

இந்நிலையில் ஆளும் அதிமுக அரசின் கூட்டணியில் உள்ள தேமுதிக வின் பிரேமலதா அரசின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளார். அதில் ‘ ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம். அதைத்தவிர விர தமிழக அரசு மற்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தால் இதை விட சிறப்பாக என்ன செய்துவிடப் போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.