தமிழக பா.ஜ.க. மீது டெல்லி பா.ஜ.க. அதிருப்தி!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

l2014080655647-_-684தமிழ்குலத்தை இலங்கையில் அழித்து தற்போது இலங்கை அதிபர் இடியாப்பசிக்கலில் சிக்கி தவிக்கிறார். தன் மகனை அரசியலில் உயர்த்த நினைத்து இலங்கை அரசியலில் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. சென்ற மத்திய ஆட்சியின் ஆதரவுடன் வெறியாட்டம் போட்ட இலங்கை அதிபர், தற்போது இந்திய ஆதரவை இழந்து நிலைகுலைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அறிவாளிகளின் திட்டமிட்ட பழிவாங்குதலில் சிக்கிய இலங்கை அதிபர், தன் பதவியை காக்க வழியின்றி குழம்புவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் இணைந்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காணத்துவங்கி விட்டார்கள். இதனால் அதிர்ந்துபோன தமிழக அறிவாளிகள், இலங்கை அதிபருக்கு தமிழக மீனவர்களை காட்டிக்கொடுக்க துணிந்தார்கள். இதனை புரிந்து கொண்ட இலங்கை அதிபர், தமிழக அறிவாளிகளின் இலங்கை வருகையை கோபத்துடன் எதிர்பார்த்து காத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக அறிவாளிகள் ரிவிட் அடிக்கப்பட்டு, உயிருக்கு பயந்து ஓடும் காலம் வந்துவிட்டதாக தமிழ் வெறியர்கள் கூறுகிறார்கள். இலங்கை பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த தமிழக பா.ஜ.க.வும் தற்போது கலங்கி நிற்பதாக தலைநகரில் கூறுகிறார்கள்.
தமிழக பா.ஜ.க. தற்போது புத்துணர்ச்சியுடன் எழுந்துள்ளதாக பில்ட்அப் செய்துள்ளதாம். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்த தமிழக கூட்டணி கட்சிகளை அலட்சியம் செய்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள், தற்போது 2016 சட்டசபை தேர்தலுக்கு தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் காங்கிரஸ் தவிர பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்க்க தமிழக பா.ஜ.க. கடும் முயற்சி எடுத்து உள்ளது.
இந்த முயற்சி வெற்றிபெற அ.தி.மு.க. வாழ்த்துகிறதாம். காரணம் பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கே என்பது தலைநகர பா.ஜ.க. தலைவர்களின் கருத்தாக உள்ளது. தங்கள் கட்சியில் பாடுபட்ட தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் டிக்கெட் கொடுக்காமல், தன்னிச்சையாக சுயநல நோக்கத்துடன் வேட்பாளர்களை அறிவித்து தற்போது திணறுவது கண்டு தமிழக மக்கள் நகைக்கிறார்கள்.
உண்மையான பா.ஜ.க. தொண்டர்கள், அ.தி.மு.க.விற்கு வாக்கு சேகரிப்பதை கண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் தானாகவே விலகும் நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கூடவே தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் அவசரப்பட்டு நடந்த நிகழ்வாக டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள். தமிழக பா.ஜ.க. வலிமை வாய்ந்த கட்சியாக வலுப்பெறவேண்டும் என்ற கருத்து தமிழக மக்களுக்கு உள்ளது. காரணம் அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் எளிதாக வெற்றிபெற மிகப்பெரிய வலிமை கிட்டும் என்று கூறப்படுகிறது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர்களின் மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அரியானா மகாராட்டிர சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அரியானா முதல்வராக மாற வாய்ப்பு உள்ளதாம். நிதின்கட்காரி மராட்டிய முதல்வராக நியமனம் செய்யப்படலாம் என்ற கருத்து உலவுகிறது. அத்வானியை ஓரம்கட்டிய மோடி, அவரது ஆதரவாளர்களை மெதுவாக மத்திய அமைச்சரவையிலிருந்து கழட்டிவிடும் நிகழ்ச்சி நடக்கலாம் என்ற கருத்து உலவுகிறது.
காங்கிரஸ் தனது ஆதரவை வளர்க்க வழிதெரியாமல் திண்டாடுகிறது. ராகுல்காந்தியை கண்டாலே காங்கிரஸ் தொண்டர்கள் எரிச்சலடைவதாக தலைநகர பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
ராகுல்காந்தியின் உதவியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட திணறுகிறார்கள். கர்நாடக முதல்வருக்கும், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவருக்கும் உரசல்கள் ஆரம்பித்துவிட்டன. கர்நாடக முதல்வர் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இது மாநில காங்கிரஸ் தலைவருக்கு எரிச்சலை கிளப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதாம். இந்த தருணத்தை பா.ஜ.க. சரியாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வளர்ச்சி குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அரியானா முதல்வர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் கடும் வெறுப்பில் உள்ளார்களாம். அதேபோல் மராட்டிய காங்கிரஸ் முதல்வருக்கு சரத்பவார் கட்சி சரியான ஒத்துழைப்பை தர தயங்குவதாகக் கூறப்படுகிறது. ஆகமொத்தம் அரியானா, மராட்டியம் காங்கிரஸ் அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாம்.
திறம்பட ஆட்சி செய்த வாஜ்பாய் அரசை கவிழ்த்தது தற்போதைய ஆந்திர முதல்வர்தான் என்று குறைகூறுகிறார்களாம். தன்னுடைய சுய நல நோக்கத்துடன் வாஜ்பாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தேர்தல் நடத்தி தோல்வி அடையச்செய்ததாக கூறப்படுகிறது. அதன் எதிரொலி அகண்ட ஆந்திராவை கைவிட்டு, தற்போது குறுகிய ஆந்திராவிற்கு முதல்வராக பொறுப்பேற்ற அவலம் நடப்பதாக கூறுகிறார்கள். தமிழக முதல்வரின் டெல்லி நெருக்கம் இந்திய அரசியல்வாதிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் மோடியின் கரம் வலுப்பெற்று உயர்வதாக கலங்குகிறார்கள்.