தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

Filed under: தமிழகம்,புதுச்சேரி |

தமிழக மீனவர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக மீனவர்கள் மீது பைப்புகள், மரத்தடிகள் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தமிழக மீனவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டதால்தான் அடிப்பதாகக் கூறியுள்ளனர். இதில், எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற மீனவர்கள் 3க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை கரைக்கு மீட்டு வந்தனர். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.