தலைப்பு இதுதானா?

Filed under: சினிமா |

இயக்குநர் பாலாவுடன் இணைந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்படத்தை தயாரிக்கவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை சூர்யா அவரது டுவிட்டரி பக்கத்தில் விளக்கம் அளித்ததோடு ஒரு வரியில் பதிலும் தந்தார். அடுத்த கட்டப்படப்பிடிப்பு ஜூன் 7ம் தேதி முதல் சென்னையில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மதுரை சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே எடுத்துவிட்டு, அடுத்து கோவாவுக்கு போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. “பிதாமகன்,” “நந்தா” போன்ற படங்களை அடுத்து, சூர்யா,- பாலா இருவரும் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்திற்கு “கடலாடி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.