கொரடாச்சேரி, மே 3:
திருவாரூரில், ஆயுள் தண்டனை குற்றவாளிகளை, சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட காவல் நிலைய தலைமை காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி அளித்து பாராட்டினார்.
கொரடாச்சேரி காவல் சரகம் இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட கொரடாச்சேரி காவல் நிலைய தலைமை காவலர் திரு. ரமேஷ் என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று (02.05.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.