தல அஜீத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்?

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. அதை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜீத் 61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகப்பூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு கிளம்பிய, அஜீத்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.