தாஜ்மஹாலை பார்க்க கொரொனா பரிசோதனை கட்டாயம்!

Filed under: இந்தியா |

காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா நோய்தொற்று பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் கொரொனா நோய் தொற்று பரவி வருகிறது. விரைவில் 5ம் அலை பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், முக்கவசம் அணியவும் உத்தரவிட்டுள்ளது. அதன் எதிரொலியாக தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.