தாயே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற கொடூரம்!

Filed under: இந்தியா |

2 பெண் குழந்தைகளை பெற்ற தாயே எரித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதியின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜோதிக்கும் அவரது கணவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. மன உளைச்சலில் இருந்த ஜோதி, தன் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஒரு குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.