திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Filed under: அரசியல்,புதுச்சேரி |

புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் காலை தொடங்கிய போது ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் புதுச்சேரி பேரவைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே ராகுல் காந்தி விவகாரம் குறித்து வாக்குவாதம் எழுந்தது.