திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன். அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் என்ன தகராறு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவருக்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகவும் பிரதமரை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தருகிறார் என்றால் அந்த மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். மாநில காவல்துறை அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். மாநில காவல்துறையை அவர்கள் உதவிக்கு பயன்படுத்தி கொள்வார்களே தவிர முழு பாதுகாப்பு பொறுப்பையும் மத்திய உள்துறை அமைச்சகம் தான் எடுத்துக்கொள்ளும். எனவே அண்ணாமலை குற்றம்சாட்டுவது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தான், அவருக்கும் அமித்ஷாவுக்கும் என்ன தகராறு என்று தனக்கு தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.



