பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த “துணிவு” திரைப்படமும், விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த “துணிவு” படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின், “அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாது. அஜீத் நடித்த “துணிவு” மற்றும் விஜய் நடித்த “வாரிசு” ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் சமமாகவே தியேட்டர்கள் ஒதுக்கப்படும். இதற்கு முன்னர் இது போன்று இரண்டு பெரிய படங்கள் வெளியான போதும் அவ்வாறுதான் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது” என்று கூறினார். அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், விஜய் நடித்த “வாரிசு” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையும் பெறுவார் என்று கூறப்படுகிறது.