திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் முடிவுகள் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதான். தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா? வெட்கக்கேடு” என பதிவிட்டுள்ளார்.