தி.மு.க.வில் நடக்கும் சமாதான படலம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

Stalin,-Alagiri,-MK-EPSதமிழர் குலத்தை அழிக்க துணிந்த இலங்கை அதிபருக்கு குடும்ப அரசியலால் ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ராஜபக்சே தனது மகனை அரசியலில் உயர்வுபடுத்தி அதிபருக்கான நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். அதனை மோப்பம்பிடித்த அவரது இளவல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே மறைமுக எதிர்ப்பை உருவாக்கி உள்ளார்.

தமிழக முதல்வரின் புகழை குறைக்கச் செய்த நடவடிக்கைகள் கோத்தபயவின் கைவண்ணம் என்ற கருத்து உலவுகிறது. சிங்கள புத்த பிட்சுக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு, ராஜபக்சேயின் அதிகாரத்தை பறிக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அறிவாளிகளையும், சுயநலம் கொண்ட இந்திய அரசியல்வாதிகளையும் நம்பி மோசம் போனதாக இலங்கை அதிபர் தலையில் அடித்துக்கொள்வதாக இலங்கையில் கூறப்படுகிறதாம். தமிழக மீனவர்களை பாதுகாப்பு என்ற போர்வையில் கைது செய்து, அரசியல் புரட்சி செய்ய திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தங்கள் திட்டம் பறிபோனதை அறிந்து கொண்ட தமிழ் துரோகிகள், கோத்தபய ராஜபக்சேவிற்கு தூபம் போட்டுள்ளார்கள் என்ற கருத்து உலவுகிறது.

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டும் வரை வாய்மூடிக் கொண்டிருக்கும் இந்திய பாதுகாப்பு கப்பற்படை, இலங்கை படை கைது செய்த பிறகு கூப்பாடு போடுவதாகக் கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள், தமிழகத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தை தலைநகரில் கண்டு சிரிக்கிறார்களாம். இந்திய கப்பல் படையை முடுக்கிவிட்டு, இந்திய இலங்கை எல்லையை கண்காணிக்க உத்தரவிட மறுத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் ஆடி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து, மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று குமுறுகிறது இந்திய மீனவர் சமுதாயம்.
பா.ஜ.க.விற்கு வரிந்து கட்டி ஆதரவு கேட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தமிழக நடிகர்கள், தமிழக மீனவர்களுக்காக எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று உணர்வு கொப்பளிக்க குமுறுகிறார்கள். தமிழக முதல்வரின் தமிழ் எழுச்சி பா.ஜ.க.வை தலைநகரில் நடுங்க வைத்துள்ளது என்கிறார்கள், வேட்டி மூலம் அரசியல் செய்த சதிகாரர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது தமிழக முதல்வர்தானாம்.

தமிழக விளையாட்டுத் துறையை ஒட்டுமொத்தமாக அழித்ததாக சென்ற தி.மு.க. ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறுகிறார்கள். ராகுல்காந்தியின் அடிவருடிகள் விளையாட்டுத்துறையில் புகுந்து, அதை காய்கறி அங்காடிகளாக மாற்றிவிட்டார்களாம். தலைசிறந்த விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தி, நிதி கொடுக்கும் வீரர்களை ஊக்குவித்து இந்திய நாட்டை அவமானப்படுத்தி உள்ளார்கள். அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்தும் விளையாட்டில் வெற்றிபெற்ற தமிழக வீரர்களை சென்ற தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து தமிழக விளையாட்டு கலையை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா சென்ற ஆட்சியில் வெற்றிபெற்ற வீரர்களை மாவட்ட வாரியாக ஆராய்ந்தால் தமிழக வீரர்களை எந்தநாடும் வெற்றிகொள்ளத் தயங்கும் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

தமிழக அரசியலில் விரைவில் மாபெரும் திருப்பம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உலவுகிறது. தமிழக தி.மு.க.வில் குடும்பச்சண்டை என்ற போர்வையில் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றுகூடி இருப்பதாக தி.மு.க. தொண்டர்கள் கூறுகிறார்கள். தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் தி.மு.க. தலைவர் குடும்ப பிரச்னையை கையாண்டு, அமைதி ஏற்படுத்தி உள்ளார். இதனால் குடும்ப ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் அநாதைகளாக திரியும் தி.மு.க.வும், காங்கிரசும் மறுப்பு பிளக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஜெயலலிதாவுக்கு தோள்கொடுக்கும் நிகழ்ச்சி விரைவில் ஏற்படும் என்ற அரசியல் கருத்து தலைநகரில் உலவுகிறது. மேலும் பா.ஜ.க. தமிழகத்தில் எத்தகைய சாகசங்களைக் காட்டினாலும் தமிழக பா.ஜ.க. தொண்டர்கள், ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக பாராளுமன்ற மைய ஹாலில் வடஇந்திய பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள்.