இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்:

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 20-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 20-ம் தேதியும், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21-ம் தேதியும் பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.