மதுரை எலுமலை அருகே 17வயது பள்ளிச் சிறுமி தீக்குளித்து உயர்துறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையைத் தாங்க முடியாமல் நாகலட்சுமி என்ற இந்த பள்ளிச் சிறுமி தீக்குளித்தார்.
உடல் முழுதும் 80% தீக்காயங்களுடன் இந்தப் பெண் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி திட்டத்தினால் பயனடைந்தவர் நாகலட்சுமி இதனால் இந்தத் தீர்ப்பினால் அவர் மனம் உடைந்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கோபால்சாமி தெரிவித்தார்.
வாங்கி நாராயணபுரத்தில் வசித்து வரும் இந்த +2 படிக்கும் பெண் வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் உடலில் கெரசினை ஊற்றிப் பற்றவைத்து கொண்டார்.