துபாயில் தீபாவளி கொண்டாடிய கார்த்தி!

Filed under: உலகம்,சினிமா,தமிழகம் |

‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது, ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக எனது கதாபாத்திரம் இருக்கும்” என்று தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார் கார்த்தி. தனது சமூக நல செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற கார்த்தியிடம், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் துபாயில் இந்திய தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தங்கியிருப்பதை தெரிவித்தார். அவர்களுடன் முன்கூட்டியே தீபாவளியை கொண்டாட விரும்புவதாகவும் கார்த்தி தெரிவித்தார். தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவேண்டும் என்பதற்காகவே வருடக்கணக்கில் அவர்களை பிரிந்து வசித்து வருவதும் தெரிந்து நெகிழ்ந்து போன கார்த்தி, அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார். ஜப்பானை தொடர்ந்து ‘சூதுகவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி, ‘96’ புகழ் பிரேம்குமார் ஆகியோரின் படங்களிலும் மற்றும் “சர்தார் 2,” லோகேஷ் கனகராஜுடன் இணைந்து “கைதி 2”வையும் துவங்க இருக்கிறார் கார்த்தி.