துரை தயாநிதி மத்திய அமைச்சரா?

Filed under: தமிழகம் |

வருங்கால மத்திய அமைச்சர் துரை தயாநிதிஎன ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனான மு.க.அழகிரி அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் கட்சி தலைமை குறித்து பேசி வந்ததால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார். திமுகவை சேர்ந்தவர்கள் அவருடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஸ்டாலின் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவரது மகன் துரை தயாநிதி பங்கேற்று வந்தார். மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் வரும் 2024ம் ஆண்டு மத்திய அமைச்சரே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில் பேசு பொருளாகவும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.