தென்காசி மாவட்டத்தில் மலை வாழ்மக்களுக்கு உதவிகரம் நீட்டிய நமது நெற்றிக்கண்!

Filed under: தமிழகம் |

நாம் ஏற்கனவே தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் கொரனா உதவியாக நம் நெற்றிக்கண் பத்திரிக்கை சார்பாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பலருக்கும் அரிசி, மளிகை , காய்கறி என்று பல பொருட்களை இயன்ற அழவில் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையைஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் பளியர்கள் எனப்படும் மலை வாழ் பழங்குடி இன மக்களின் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தகவல் நமக்கு ராஜா என்பவர் மூலம் தகவல் வந்தது.

உடனடியாக, இன்று நமது நெற்றிக்கண் சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பை வழங்குவதற்கு நேரில் ராஜாவையும் அழைத்து கொண்டு சென்றோம். இந்த நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்ட நிருபர் குமார், திருச்சி நிருபர் ரமேஷ் , ஆகியோர் மலை வாழ் மக்களுக்கு உதவி செய்ய சென்றனர்.

தென்மேற்கு பருவ மழை சாரலாய் பொழிந்து கொண்டிருக்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நமக்காக காத்திருந்தனர் அந்த பளியர் இன மக்கள்.

அவர்கள் அரிசி உணவு உண்பதே இப்போது தானாம். மற்ற நேரங்களில் மலைக்குள் கிடைக்கும் கிழங்கு வகைகள் பயறு வகைகள் தேன் ஆகியவை தானாம் இப்படி பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு நாம் உதவியதில் அந்த மலை வாழ் மக்கள் நமக்கும் நமது நெற்றிக்கண் நிர்வாகத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்கள். குடும்பத்திற்கு ஒருவர் என்று வரிசையில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கும் போது அவர்கள் இடம கண்ட அந்த மகிழ்ச்சி நம்மை மேலும் இன்னும் உதவிகள் செய்ய தூண்டும்படி அமைந்தது.

நமக்காக இந்த மலைவாழ் மக்களை ஒன்றினைத்து உதவிகள் செய்த வனக்காப்பாளர் துரைராஜ் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை நினைவு கூர்கிறோம்.

அடுத்தும் உங்களிம் ஆதரவோடு எங்கள் பயணம் தொடர்கிறது.