தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 47000 மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்வு பயம் காரணமாக தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.