நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் நடு ரோட்டில் பைக்குக்கு பஞ்சர் போட்டு உதவிய தகவலை பைக்கர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத் குமார். அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பைக் பயணம் மீது தீராத ஆர்வம் கொண்டவர். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அஜீத்துடன் லடாக் பைக் பயணம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து அஜீத்தின் பைக் பயண புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. தற்போது லடாக் பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை சக பைக் ரைடரான மஞ்சு காஷ்யபா கூறியபோது, “எனது இமயமலை பயணத்தின் போது எனது பைக் பஞ்சர் ஆகிவிட்டது. பிஎம்டபிள்யூ 1250ஜிஎஸ்ஏ பைக்கில் வந்த அஜீத் என்னுடைய பைக்கை அவரே சரிசெய்து கொடுத்தார். பின்னர் அடுத்த இரண்டு மணி நேரம் ஒன்றாக பயணித்தோம்” என்று கூறி அஜீத்துடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.